ஜோ ரூட் சதம்: இந்திய மண்ணில் அசத்தும் இங்கிலாந்து!

Thursday, November 10th, 2016

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலாக விளையாடி வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரராக இறங்கிய அணித்தலைவர் குக் (21) ஏமாற்றினார்.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 19 வயதேயான இளம் வீரரான ஹசீப் ஹமீட் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பென் டக்கிட் (13) நிலைக்கவில்லை.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், மொயீன் அலி அணியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றினர்.நிதானமாக ஆடிய ஜோ ரூட் சதம் அடித்தார். ஆசியாவில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அவர் 124 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய மொயீன் அலி அரைசத கடந்தார். இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 311 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மொயீன் அலி 99 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.இந்திய அணி சார்பில், அஸ்வின் 2 விக்கெட்டும், ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: