2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத் அணி!

2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக அதிகபடியாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதேவேளை, 131 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுபெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.
000
Related posts:
சரே அணியுடனான சங்கக்காரவின் ஒப்பந்தம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிப்பு!
பெங்களுரு டெஸ்ட்டில் ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா நீக்கப்படலாம் - அசாருதீன்!
யாழ் மத்திய கல்லூரி நிறுவுநர் நாள் வெற்றிக்கிண்ணம்: அசத்தியது யூனியன் கல்லூரி பழைய மாணவர் அணி!
|
|