பெங்களுரு டெஸ்ட்டில் ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா நீக்கப்படலாம் – அசாருதீன்!

Tuesday, February 28th, 2017

பெங்களூரில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் 2-வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி பெங்களூரில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசாருதீன் மேலும் கூறுகையில் ‘துடுப்பாட்ட குறைபாடு அணியை பின்தள்ளிவிடும். அந்தவகையில் தொடரை இழந்து விட்டோம் என்று நான் கூறமாட்டேன். ஆனால், இதேபோன்ற ஆடுகளத்தில் விளையாட விரும்புகிறீர்களா என்பதை பார்க்க வேண்டியது அவசியம். பெங்களூர் சின்னசாமி மைதானம் இதுபோன்று இருக்காது என்பது எனது கணிப்பு. ஆகவே, என்னுடைய கணிப்பின்படி ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படலாம்.

இந்திய அணியின் துடுப்பாட்ட திறமையை வைத்து பார்க்கும்போது, இந்திய அணியில் கூடுதலாக கருண் நாயர் துடுப்பாட்ட வீரராக  சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறேன். ஜெயந்த் யாதவிற்குப் பதிலாக அவரை சேர்ப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

மேலும், இஷாந்த் சர்மாவின் வேகப்பந்து, இதுபோன்ற மைதானத்திற்கு உதவாது. ஆகவே, ஸ்விங் பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான புனே ஆடுகளத்தில் இந்தியா 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு துடுப்பாட்ட குறைபாடே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

201701101920552716_Another-Election-For-Mohammad-Azharuddin-This-Time-In_SECVPF

Related posts: