யாழ் மத்திய கல்லூரி நிறுவுநர் நாள் வெற்றிக்கிண்ணம்: அசத்தியது யூனியன் கல்லூரி பழைய மாணவர் அணி!

Friday, August 3rd, 2018

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 202 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு யாழ் மத்திய கல்லூரி நிறுவுநர் நாள் வெற்றிக்கிண்ணத்திற்காக  கிரிக்கெட் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தின் 14 பாடசாலைகளை சேர்ந்த பழைய மாணவர்கள் பங்கு பற்றிய போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர் துடுப்பாட்ட அணி மகுடம் சூடியது.

இதில் அரையிறுதிப் போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரியை இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றும் இறுதிப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி அணியையும் எதிர் கொண்டது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது. 51 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய யூனியன் கல்லூரி பழைய மாணவர் அணி சுயந்தனின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க விக்கெட் இழப்பின்றி வெற்றியை பெற்று யாழ் மத்திய கல்லூரியின் நிறுவுநர் நாள் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

Related posts: