கும்ப்ளேவுடன் இணைந்த ஹேரத்!

Thursday, July 20th, 2017

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன்செய்துள்ளார்.

நடைபெற்றுமுடிந்த சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 8 முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மொத்தம் 132 போட்டிகளில் 8 முறை பத்து விக்கெட்டுகளை அனில் கும்ப்ளே வீழ்த்தியுள்ளார். ஆனால் ரங்கன ஹேரத் 81வது டெஸ்ட் போட்டியிலேயே அதை சமன் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 22 முறை பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். 10 முறை பத்து விக்கெட்டுகள் வீழ்த்தி அவுஸ்ரேலியாவின் சுழல் ஜாம்பவான் ஷேன் வோர்ன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Related posts: