இலங்கையின் வெற்றியை பறித்த பாகிஸ்தான்!

Saturday, October 28th, 2017

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியி பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்தது.

இதையடுத்து இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குணதிலகா மற்று முனவீரா கடந்த போட்டிகளை விட சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.முனவீரா 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த இலங்கை வீரர்கள் சமரவிக்ரமா(32), பிரசன்னா(1), பெரேரா(3), சாங்கா 1 என வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பில் துவக்க வீரர் குணதிலாக மற்றும் பாகிஸ்தான் அணியினரின் பந்து வீச்சை தாக்குபிடித்து அரைசதம் கடந்து 51 ஓட்டங்கள் குவித்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் பாகிம் அஷ்ரப் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். சர்வதேச டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் எடுத்த முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும்.இதைத் தொடர்ந்து 125 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இலங்கை பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். துவக்க வீரர்களான அகமத் சேசாத்(27), பாகர் ஜமான்(11), பாபர் அசாம்(1), கடந்த போட்டியில் அசத்திய சோயிப் மாலிக்(9) என வெளியேற, பாகிஸ்தான் அணி ஒருகட்டத்தில் தடுமாறியது.

அதன் பின் சர்பிராஸ் அகமத் தன் பங்கிற்கு 28 ஓட்டங்கள் குவித்த நிலையில் எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்தது.துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால், இலங்கை அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த போது கடைசி கட்ட வீரரான சதாப் கான் 8 பந்துகளில் 16 ஓட்டங்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி இறுதியாக 19.5 ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

Related posts: