2 வருடங்களின் பின்னர் மத்தியூஸ் சதம்: நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி!

இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் சதம் பெற்றுள்ளார்.
அவர் பெறும் 8வது டெஸ்ட் சதம் இதுவாகும் என்பதோடு, இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இந்திய அணிக்கு எதிராக அவர் சதம் பெற்றார்.
அதன்பின்னர் 37 இன்னிங்ஸ்கள் விளையாடிய போதும் அவர் ஒரு சதத்தையும் பெற்றிருக்கவில்லை.
இதன்படி இரண்டு வருடங்களின் பின்னர் அவர் டெஸ்ட் சதம் ஒன்றை பூர்த்தி செய்துள்ளார்.
அவர் இந்த போட்டியில் 98 ஓட்டங்களுடன் விளையாடும் போது, அவர் வழங்கிய இரண்டு பிடிகளை இந்திய வீரர்கள் தவறவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெற்றியை தனதாக்கிய அவுஸ்திரேலியா!
அடி மேல் அடிவாங்கும் அவுஸ்திரேலியா அணி
மெஸ்சியின் சொதப்பல் - பரிதாபமாக வெளியேறியது அர்ஜெண்டினா!
|
|