ICC-BCCI இடையே கருத்து வேற்றுமை !

Wednesday, October 16th, 2019


புதிய உலகளாவிய கிரிக்கட் தொடர்களை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை மேற்கொண்ட தீர்மானம் குறித்து, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கும், சர்வதேச கிரிக்கட் பேரவைக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

2023ம் ஆண்டு முதல் 2031ம் ஆண்டு வரையான எட்டாண்டுகால திட்டங்கள், சர்வதேச கிரிக்கட் பேரவையின் உயர்மட்டக் கூட்டத்தின் பின்னர் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் 50 ஓவர்களைக் கொண்ட உலகக்கிண்ண கிரிக்கட் தொடர்கள் இரண்டும், 20க்கு20 போட்டிகளுக்கான 4 உலகக்கிண்ணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

அவற்கு மேலதிகமாக, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் விளையாடுகின்ற அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு உலகளாவிய 2 கிரிக்கட் தொடர்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எதிர்ப்பை தெரிவித்து வந்திருந்த நிலையில், தற்போது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.

Related posts: