முரளிதரனுக்கு HALL OF FAME விருது!

Saturday, June 10th, 2017

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அதிகூடிய உயர்விருதான HALL OF FAME விருது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வுPச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் நேற்று நடைபெற்ற இந்திய இலங்கை கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முரளிதரனுக்கு வழங்கப்பட்டது.

இதன் மூலம் HALL OF FAME விருதினை பெற்ற முதலாவது இலங்கை வீரர் என்பதனை முத்தையா முரளிதரன் வராற்றின் பதிவுசெய்துள்ளார்.முத்தையா முரளிதாரன் 800 விக்கட்டுக்களை கைப்பற்றிய உலகின் முதலாவது பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்குமேலாக ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் 534 விக்கட்டுக்களை வீழ்த்தியவர் முரளிதரன். T20 கிரிக்கட் போட்டியில் 13 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.சர்வதேச கிரிக்கட்டில் டெஸ்ற் , ஒரு நாள் மற்றும் T20 போட்டியில் வீழ்த்தியுள்ள மொத்த விக்கட்டுக்களின் எண்ணிக்கை 1347 ஆகும். சுழற்பந்துவீச்சாளர் என்ற ரீதியில் இலங்கை கிரிக்கட்டின் மேம்பாட்டுக்கான 19 வருட காலம் உன்னதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.கிரிக்கட் விமர்சகர்களினால் உலக கிரிக்கட் வரலாற்றில் உருவான சுழல்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் இவருக்கு உண்டு.

Related posts: