நாமலின் கைபேசியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை!

Thursday, December 6th, 2018

ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் நமால் குமாரவின் செல்லிடப்பேசி வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய நாலக டி சில்வா கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அம்பலப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நாமல் குமாரஇ செல்லிடப்பேசி உரையாடல்கள் பலவற்றை சாட்சியமாக சமர்ப்பித்திருந்தார்.

நாமல் குமாரவின் செல்லிடப்பேசியின் சில உரையாடல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக செல்லிடப்பேசி வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டே நீதிமன்றில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த செல்லிடப்பேசி தரவு அழிப்பு தொடர்பில்இ நீதவான் ரங்க திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த செல்லிடப்பேசி அடுத்த வாரம் ஹொங்கொங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வழக்கு பொருளாக பட்டியலிடப்பட்டுள்ள செல்லிடப்பேசியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி குறித்த செல்லிடப்பேசி ஹொங்கொங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அழித்த தகவல்களை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


உதவி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு - செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்!
துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி...
எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க சலுகை வேலைத்திட்டம் - பதில் ஜனாதிபதி ரண...