எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க சலுகை வேலைத்திட்டம் – பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!

Sunday, July 17th, 2022

பொதுமக்களுக்கு அவசியமான எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவதற்காக, உடனடி சலுகை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்படவுள்ள சலுகை பாதீட்டில் மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் முறைமையை வலுப்படுத்தவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

எரிபொருள் மற்றும் உரங்களை உடனடியாகவும், கிரமமாக வழங்குவதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் சபை என்பதை சிறந்த யோசனையாக ஏற்றுக்கொள்ளுவதாகவும் பதில் ஜனாதிபதி குறித்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழலை இல்லாதொழிக்கும் நடைமுறைகள் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு அறிவிக்கவும் இந்தக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: