203 ஆவது ‘அமாதம் சிசிலச’ நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு – நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும் விஷேட வழிபாடு!

Friday, October 30th, 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 203ஆவது தர்ம உபதேசம் இன்று 2020.10.30 அலரி மாளிகையில் நடைபெற்றது.

முன்பதாக வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் நாட்டுக்கு நலம் வேண்டி சோமாவதி சந்நிதிக்கு வழங்கப்படவுள்ள முத்துக்களினால் அலங்கரிக்கப்பட்ட 6 அடி உயரமான பேழையை வழிபட்டார்.

பௌத்த மதத்தினூடான மன அமைதி உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இந்த தர்ம உபதேசத் தொடரின் இம்முறை தர்ம உபதேசம் வணக்கத்திற்குரிய அளுத்கம பஞ்ஞாசார தேரரினால் நடத்தப்பட்டது.

பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் அமாதம் சிசிலச தர்ம உபதேசத் தொடர் குறித்து மஹாசங்கத்தினர் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த வணக்கத்திற்குரிய தேரர், 203ஆவது முறையாக நடத்தப்பட்டுள்ள இந்த தர்ம உபதேசத் தொடரின் ஊடாக ஒரு நாளுக்கு ஒருவர் வீதம் தங்களது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வார்களாயின் அதன் மூலமான பலன் பிரதமரையே சேரும் என்றும் குறிப்பிட்டார்.

துயரங்களிலிருந்து மீளுவதற்கும், பிறரை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டிற்கு கடன்படாத பிரஜையொருவர் என்றும்  அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடைபெற்ற தர்ம உபதேசம் பக்தர்களின் பங்கேற்பின்றி, பிரதமர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது.

அத்துடன் கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: