மீண்டும் வருகிறார் சனத் ஜெயசூரியா!
Tuesday, April 12th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியா மீண்டும்தெரிவுக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளதாதெரிவிக்கப்படுகின்றது.
அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக் குழு டி20 உலகக்கிண்ண அணியை தெரிவு செய்தது. ஆனால் மோசமாக ஆடிய இலங்கை லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் இலங்கை அணியின் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்ட அரவிந்த டி சில்வா மேற்கொண்டு தனது ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை. இதனால் புதிய தெரிவுக் குழு தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில் மீண்டும் சனத் ஜெயசூரியா தெரிவுக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.2014ம் ஆண்டு இலங்கை டி20 உலகக்கிண்ணத்தை வென்ற போது சனத் ஜெயசூரியா தான் தெரிவுக் குழுவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


