தடகள வீராங்கனையாக கலக்கும் மாற்றுத்திறனாளி!

Tuesday, October 24th, 2017

கேரளாவைச் சேர்ந்தவர் சோபியா எம்.ஜோ, காது மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உடைய இவர் இப்போது பல சாதனைகளை புரிந்துள்ளார்.

பிரபல மொடல் அழகியாக உயர்ந்த இவர் தடகள வீராங்கனையாகவும் முத்திரை பதித்துள்ளார். தேசிய அளவில் தட்டு எறிதலிலும், குண்டு எறிதலிலும் மூன்று முறையும் சாம்பியன் பட்டத்தினை வென்றிருக்கிறார்.

இந்திய சார்பில் பல சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு அசத்திய சோபியா சிறந்த ஓவியக்கலைஞரும், நகை வடிவமைப்பாளும் ஆவார்.சிறுவயதில் பள்ளியில் இவரை சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுத்தது, ஆனால் தற்போது ஆங்கில பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார்.கேரளாவில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் காது கேளாத பெண்மணி என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சோபியா.

மேலும் 2014ம் ஆண்டில் நடைபெற்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களூக்கான மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததோடு ‘பெஸ்ட் விஷஷ்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.எதிர்காலத்தில் ஒரு கார் ரேசராக வேண்டும் என்பதே இவரது இலட்சியமாம்

Related posts: