ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான யோசனை!

Wednesday, September 4th, 2019


உடன்படிக்கையின்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான யோசனை இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

ஆனால் இதற்கு எதிரான யோசனை ஒன்றை முன்வைக்க, தொழிற்கட்சியுடன் இணைந்து ஆளுங் கட்சியின் அதிருப்தியாளர்கள் சிலர் முயற்சித்திருப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறான நிலைமை ஏற்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க நேரும் என்ற நிலைமை இருக்கிறது.

அதேநேரம், உடன்படிக்கையற்ற ப்ரெக்சிட் விடயத்தை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தால், அடுத்த மாதம் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக, பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

தமக்கு தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், ப்ரெக்சிட் விடயத்தில் தீர்மானம் எட்டப்படாத பட்சத்தில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்

Related posts:

ஆசிரிய இடமாற்றக் கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன - ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளது இலங்கை ஆசிர...
பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் - ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநி...
யாழ் மாவட்ட பனை - தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...

சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறி...
முதலீட்டு செயல்முறைகளை எளிமையாக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் திலும்...