ஸ்டேன் இனது சாதனை  ஸ்டுஅர்ட் போர்ட்னால்  தகர்ப்பு!

Saturday, March 24th, 2018

டெஸ்ட் விக்கெட்கள் 400 இனைக் கைப்பற்றிய உலகின் மிக வேகமாக பந்து வீசும் இளம் வீரராக இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டுஅர்ட் ப்ரோட் (Stuart Broad)சாதித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடன் இன்று(22) ஆரம்பமான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் Tom Latham இனது விக்கெட்டினை கைப்பற்றியே குறித்த சாதனையில் அவரது பெயரினை பதித்துள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த சாதனைக்கு பெயர் பதித்திருந்த தென்னாபிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேன் 400 விக்கெட்களை வயது 32 வருடங்கள் 33 நாட்களில் கைப்பற்றியிருந்ததோடு, தற்போது ஸ்டுஅர்ட்  400 விக்கெட்களை கைப்பற்றி குறித்த சாதனையினை முறியடித்துள்ளார். இன்றைக்கு அவருக்கு வயது 31 வருடங்கள் 271 நாட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: