சனத் ஜெயசூரியா ,அத்தப்பத்து கூட தடுமாறியவர்கள்தான்: திரிமன்னேவுக்கு அரவிந்த டி சில்வா ஆதரவு!

Friday, April 8th, 2016

டி20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி அடைந்த தோல்விக்கு நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று அரவிந்த டி சில்வா கூறியுள்ளார்.

டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியை அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக் குழு தெரிவு செய்தது. இதில் முன்னதாக உள்ள இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மல், திரிமன்னேவுக்கு புதிய அணியில் இடமளிக்கப்பட்டது. ஆனால் திரிமன்னே (6,5,3,0) 4 இன்னிங்களில் 14 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.

இதனால் புதிய தெரிவுக் குழு தேர்வு செய்த அணி டி20 உலகக்கிண்ண தொடருக்கு சரியில்லாத ஒன்று என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் அணியின் நலனுக்காகவே சில முடிவுகள் எடுக்கப்பட்டது. தோல்விக்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அரவிந்த டி சில்வா கூறியுள்ளார்.

மேலும், தொடர் முழுவதும் சொதப்பிய திரிமன்னேவுக்கு ஆதரவாகவும் அவர் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “தற்போது உள்ள நிலைமையில் திரிமன்னே மிகச்சிறந்த வீரர். அவர் இலங்கை அணிக்கு அவசியமான ஒருவர்.

அத்தப்பத்து 6 டக்-அவுட்டுக்கு பிறகும் அணியில் இருந்தார். நடுவரிசையில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த சனத் ஜெயசூரியாக கூட அணியில் நீடித்து சாதனை படைத்தார்” என்று கூறியுள்ளார்.

Related posts: