சாதனை படைத்த சாமரி அதபத்து!

Saturday, July 1st, 2017

மகளிர் உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீராங்கனைகளில் சதம் அடித்த ஒரே வீராங்கனையாக சாமரி அதபத்து தனது அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து பிரிஸ்டல் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவுஸ்ரேலியாவுடனான போட்டியில் இலங்கை அணி சார்பாக சாமரி அதபத்து தனது திறமையை வெளிபடுத்தியுள்ளார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் விளையாடிய சாமரி அதபத்து 143 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 178 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மகளிர் உலக்கிண்ண தொடரில் இலங்கை அணி சார்பாக முதலாவது சதத்தினை பெற்றவர் என்ற பெருமையினை சாமரி அதபத்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டு விக்கட் இழப்பிற்கு 262 ஓட்டங்களை பெற்று அவுஸ்ரேலிய அணி இந்த போட்டியில்  வெற்றி பெற்றுக்கொண்டது.

Related posts: