வலுவான நிலையில் இலங்கை!

Tuesday, August 16th, 2016

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
சண்டிமால் (132), தனஞ்செயா டி சில்வா (129) ஆகியோரின் சதத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, அந்த அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (119) மற்றும் ஷேன் மார்ஷ் (130) ஆகியோரின் சதத்தால் முதல் இன்னிங்சில் 379 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.

இலங்கை அணி 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 8 ரன்னுடனும், குசால் சில்வா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கருணாரத்னே 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் ஓரளவிற்கு ரன்கள் சேர்த்தார்கள். ஆனால் குசால் டி சில்வா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 115 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இவரது சதத்தால் இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. தற்போது வரை இலங்கை அணி 288 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை காலை விறுவிறுப்பாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வைத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் ஆஸ்திரேலியா கடைசி நாளில் 300 ரன்களை சேஸிங் செய்ய வேண்டும். இலங்கை ஆடுகளத்தில் கடைசி நாளில் 300 ரன்களை சேஸிங் செய்வது அவ்வளவு எளிது கிடையாது.
இதனால் இலங்கை அணி கொழும்பு டெஸ்டில் வெற்றி பெறும். இல்லையெனில் போட்டி டிராவில் முடியும்.

Related posts: