யாழ். வலய பெண்கள் எல்லே போட்டி வாதரவத்தை விக்னேஸ்வரா சம்பியன்!

Wednesday, March 14th, 2018

 புத்தூர் வாதரவத்தைத விக்னேஸ்வரா வித்தியாலய அணியினரின் சிறப்பான களத்தடுப்பால் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

யாழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான எல்லே போட்டியின் இறுதியாட்டம் நேற்று யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது .

இறுதியாட்டத்தில் வாதரவத்தை விக்னேஸ்வரா கல்லூரி அணியை எதிர்த்து உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அணி மோதியது இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வாதரவத்தை விக்னேஸ்வரா கல்லூரி அணி 30 பந்தகளில் யானுசா ஒரு ஓட்டத்தை பெற்றுக் கொடுக்க 14 விக்கெட்டுக்களை பறி கொடுத்து ஒரு ஓட்டத்தை பெற்றனர் .

பதிலுக்கு தடுப்பெடுத்தாடிய உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அணியினர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய வீராங்கனையினரின் நுட்பமான களத்தடுப்பால் ஒட்டத்தை பெறுவதில் சிரமப்பட்டனர்.

இதனால் வழங்கப்பட்ட 30 பந்துகளில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஓட்டமெதனையும் பெறாமல் தோல்வியடைய இதனால் வாதரவத்தை  விக்னேஸ்வரா வித்தியாலய அணியினர் ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்

Related posts: