யுத்த தாங்கியில் இயந்திர கோளாறு: போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அணி!
Tuesday, August 15th, 2017
சீனா , இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளின் பங்கேற்பில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுற்ற சர்வதேச போர் விளையாட்டு விழாவில் ரஷ்யா வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது இடம்பெற்ற 28 நிகழ்வுகளின் 17 ல் ரஷ்யா வெற்றிப் பெற்ற நிலையில் , சீனா இரண்டாம் இடத்தையும் கஸகஸ்தான் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
அஜர்பைஜான், பெலோருஸ், எகிப்து, ஈரான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் முறையே அடுத்த இடங்களை பெற்றுள்ளன.இந்திய அணியினர் போட்டிக்காக பயன்படுத்திய இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டீ -90 ரக யுத்த தாங்கியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்திய அணியினருக்கு குறித்த போட்டியில் இருந்து விலக நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அணியில் சிறந்தவர் ஹேரத்!
உலகக் கிண்ண கால்ப்பந்தில் கோல் மழை பொழிந்தது இங்கிலாந்து!
தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் பெடரர்!
|
|
|


