2021ஆம் ஆண்டு றக்பி உலகக்கிண்ணம் இங்கிலாந்தில்!

Friday, October 28th, 2016

2021ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள றக்பி உலகக் கிண்ணம், இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளதாக, றக்பி லீக் சர்வதேசச் சம்மேளனம் அறிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை முந்திக் கொண்டே, இந்த வாய்ப்பை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.

இதற்கு முன்னர், 2013ஆம் ஆண்டில் றக்பி உலகக் கிண்ணத்தை நடாத்திய இங்கிலாந்து, அதன் போது அரையிறுதிப் போட்டிகள் வரை முன்னேறியிருந்தது.

இந்த முடிவு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த றக்பி லீக் சர்வதேசச் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் கொலியர், “2013ஆம் ஆண்டில், அற்புதமான உலகக்கிண்ணத்தை, இங்கிலாந்து நடத்தியது. அத்தோடு, அந்த உலகக்கிண்ணத்தை பார்வையாளர்கள், விரிவு, பெருமை ஆகியவற்றில் முந்தும் வகையிலான முழுமையான திட்டத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்” என்றார்.

2021ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெறும் மிகப்பெரிய உலகக் கிண்ணமாக அமையவுள்ளது. இத்தொடரில், 16 அணிகள், 31 போட்டிகளில் மோதவுள்ளன. இந்தப் போட்டிகளில் 80 சதவீதமானவை, லங்கஷையரிலும் யோர்க்ஷையரிலும் இடம்பெறவுள்ளன.

2021ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடத்தும் வாய்ப்பை ஐக்கிய அமெரிக்கா தவறவிட்டாலும், 2025ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை, அந்த நாடே நடத்த வேண்டுமென, றக்பி லீக் சர்வதேசச் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது

article_1477579103-Rugby_27102016_GPI

Related posts: