வில்லியர்ஸ் அதிரடி: ட்ரைடன்ஸ் வெற்றி!

Wednesday, July 6th, 2016

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரிபியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய போட்ரி யோட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ட்ரைடன்ஸ் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணியின் வில்லியர்ஸின் அதிரடியின் மூலமாக இந்த வெற்றியை ட்ரைடன்ஸ் அணி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய போட்ரியோட்ஸ்  அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.போட்ரியோட்ஸ் அணி சார்பில் லிவிஸ் அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் பார்னெல் மற்றும் வைஸ் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

163 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ட்ரைடன்ஸ் 18.4 ஓவர்களில்  3 விக்கட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது. இதில் வில்லியர்ஸ் 33 பந்துகளில் 63 ஒட்டங்களையும், மலிக் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் திசர பெரேரா 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.போட்டியின் ஆட்டநாயகனாக வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்

Related posts: