இங்கிலாந்து அணியை எச்சரித்த பீட்டர்சன்!

Friday, November 4th, 2016

இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி, அஸ்வின், விராட் கோஹ்லியால் நெருக்கடியை சந்திக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9ம் திகதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்த தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கெவின் பீட்டர்சன் கூறுகையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மிகச் சிறந்த பவுலர். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.எதிரணி வீரர்களை மிரள வைத்து வருகிறார். நான் அவருக்கு எதிராக விளையாடும் போது அவரது தூஸ்ரா பந்துவீச்சை சமாளித்தேன். ஆனால் தற்போது இருக்கும் இங்கிலாந்து வீரர்கள் அவரது தூஸ்ராவை சமாளிக்க முடியாவிட்டால் கஷ்டம் தான்.

அதே போல் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும் அசத்தி வருகிறார். அவர் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார். தனது அணிக்காக மிகப் பெரிய ஓட்டங்களை குவிக்கிறார்.நான் டி.வியை ஆன் செய்யும் போது கோஹ்லி நியூசிலாந்து அணிக்கு எதிரான 85 ஓட்டங்களுடன் நாட்- அவுட்டாக இருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் எளிதாக ஓட்டங்களை எடுக்கும் திறமையை பெற்றுள்ளார்.

இந்தியா சென்றிருக்கும் இங்கிலாந்து அணி வீரர்கள் இவர்களை சமாளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு நெருக்கடி தான் என்று கூறியுள்ளார்.

Tamil-Daily-News-Paper_66260492802

Related posts: