முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி!

Monday, August 2nd, 2021

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

வலுவான ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் ஹாக்கி இந்திய வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

அரையிறுதியில் அர்ஜெண்டினாவை சந்திக்கிறது இந்திய மகளிர் ஹாக்கி அணி. அன்று ஆடவர் ஹாக்கி அணியும் 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிக்குத் தகுதி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்க வாய்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பரபரப்பான காலிறுதி ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்தியாவின் வெற்றி கோலை அடித்தார், இதுவே அவரது முதல் ஒலிம்பிக் கோலாகவும் அமைந்தது. வரலாற்று வெற்றியில், மகளிர் ஹாக்கி அணியின் ஒலிம்பிக் மைல்கல் வெற்றியில் இதன் மூலம் குர்ஜித் கவுர் தடம்பதித்தார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் ஹாக்கி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை இந்திய மகளிர் ஹாக்கி அணி பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணி 3 முறை சாம்பியன்களாகும்.

22வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை குர்ஜித் கவுர் அருமையாக கோலாக மாற்றினார்.

000

Related posts: