ரசிகர்களின் வன்முறையால்  ரஷ்ய அணிக்கு அபராதம்!

Wednesday, June 15th, 2016

ஐரோப்பிய கால்பந்து தொடரில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தில் ரஷ்ய அணிக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது.

பிரான்ஸில் யூரோ கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை பார்க்க உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் அங்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து– ரஷ்யா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மார்செல் நகரில் நடந்தது. இந்தப் போட்டியின் போது இரு அணி ரசிகர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

மைதானத்திற்கு வெளியே மோதலில் ஈடுப்பட்ட இவ்விரு அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வன்முறையில் ஈடுபட்டனர்.ரசிகர்களின் இந்த கலவரத்தால் மைதானமே போர்க்களமாக காட்சி அளித்தது. இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ரசிகர்களின் இந்த அடாவடித்தனத்தால் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் கோபம் அடைந்ததுள்ளது.

அவசர ஆலோசனை நடத்திய கால்பந்து கூட்டமைப்பு, இது போன்று ரசிகர்களின் வன்முறை நீடித்தால் இங்கிலாந்து, ரஷ்ய அணிகள் தகுதி நீக்கம் செய்யப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் ரஷ்ய அணிக்கு 1 லட்சத்து 69 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் தொந்தரவு, இன ரீதியான தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: