வல்லவன் தொடர் ; ஊரெழு றோயல் வெற்றி!

நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் பிரமாண்ட மின் ஒளியில் நடத்தும் வல்லவன் உதைபந்தாட்ட சமரில் 03.10.2016 அன்று சடைபெற்ற போட்டியில் ஊரெழு றோயல் வி.க எதிர்த்து பலாலி விண்மீன் வி.க. மோதியது. போட்டியின் 10ஆவது மற்றும் 18ஆவது நிமிடங்களில் றோயல் வி.கழக வீரர் நிதர்சன் தொடர்ந்து இரண்டு கோலினை அடித்து எதிரணிக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்த ஆட்டத்தில் றோயல் நேசன் மேலும் ஒரு கோலினை பதிவு செய்ய முதற்பாதி ஆட்டத்தில் 3:0 என றோயல் முன்னிலை பெற்றது.
2ஆவது பாதி ஆட்டத்தில் றோயல் சஜந்தன் மேலும் ஒரு கோலினை அடித்து அணிக்கு வலுச் சேர்த்தார். தொடர்ந்த ஆட்டத்தில் விண்மீன் வி.கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற தண்ட ஒதையினை கோலாக மாற்றாது தவிர விட மீண்டும் கிடைக்கப்பெற்ற தண்ட உதையின் மூலம் விண்மீன் முதலாவது கோலினை பதிவு செய்தது. ஆட்ட நேர முடிவில் 4:1 என றோயல் வி.க வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக நிதர்சன் தெரிவு செய்யப்பட்டதுடன் அணிக்கான பணப்பரிசினை 52ஆவது இராணுவப்படை பிரிவின் சிவில் நிர்வாக பொறுப்பாளர் லெப்டினன் கேணல் J.S.N.U குணவர்த்தன வழங்க பதக்கத்தினை கட்டளை தளபதி லெப்டினன் கேணல் P.G.C.S கல்லாகே R.S.P அணிவித்தார்.
Related posts:
|
|