வலுவான நிலையில் இந்திய அணி!

Sunday, October 2nd, 2016

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் லோகேஷ் ராகுல், ரகானேவின் அசத்தல் சதம் கை கொடுக்க இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. இன்றைய நாள் ஆட்டத்தின் பெரும் பகுதி மழையால் பாதிக்கப்பட, முன்னதாகவே ஆட்டம் முடிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சகா 47 ரன்னில் அவுட்டாகி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே அசத்தல் சதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த மிஸ்ரா(21) சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய சேஸ், அடுத்தடுத்த சமி(0) யாதவ்(19) ஆகியோரை பெவிலியன் அனுப்பினர்

முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இந்தியா 304 ரன்கள் என வலுவான முன்னிலை பெற்றது. ரஹானே 108 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் 5 விக்கெட் கைபற்றினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை துவங்கும் முன், தொடர்ந்து மழை பெய்ய ஆட்டம் பாதிக்கப்பட்டது. 46.1 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளை முன்னதாகவே ஆட்டம் துவக்கப்பட்டு, 98 ஓவர்கள் வீசப்படவுள்ளது. வானிலை கைகொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு தடை ஏதும் இருக்காது.

espn1-720x480

Related posts: