திட்டமிட்டே இதை செய்தோம் -ஐசிசி

Sunday, June 5th, 2016
வேண்டுமேன்று தான் இந்தியா- பாகிஸ்தான் இரு அணிகளையும் தொடர்ந்து ஒரே பிரிவில் சேர்த்து வருவதாக ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

எதிர்ரும் 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

சமீப காலத்தில் ஐசிசி தொடர்களில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெறுவது இது 5-வது முறையாகும்.

உலக கிண்ண போட்டியிலும், 20 ஒவர் உலகக் கிண்ண தொடரிலும் கூட இரு அணிகளும் ஒரே பிரிவில் தான் இடம் பெற்றிருந்தன.

தற்போது 2017ல் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரிலும் இரு அணிகளும் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறும்போது, சந்தேகமே வேண்டாம். வேண்டுமென்றே தான் நாங்கள் இரு அணிகளையும் ஒரே பிரிவில் சேர்த்துள்ளோம். இரு அணிகளும் மோதும் போது அது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் பிரபலம் ஆகிறது.

மேலும் ரசிகர்களும் அதிக அளவில் போட்டியை காண மைதானத்துக்கு வருவார்கள். சர்வதேச அளவில் இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related posts: