இந்தியாவை வென்றது தென்னாபிரிக்கா!  

Thursday, February 22nd, 2018

சுற்றுலா இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

செஞ்சூரியனில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மனிஸ் பாண்டே 79 ஓட்டங்களையும், மகேந்திர சிங் டோனி 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.

பதலிளித்த தென்னரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஜே.பி டுமினி ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும், ஹெய்ன்ரிக் க்ளாசென் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி, 3 போட்டிகளைக் கொண்ட இந்த இருபதுக்கு இருபது தொடர் தற்போது ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் உள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனிடையே, நியுசிலாந்தில் இடம்பெற்ற முக்கோண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதி போட்டியில் அவுஸ்ரேலிய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் நியூசிலாந்து அணியை வெற்றிக்கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த அவுஸ்ரேலிய அணி 14.4 ஓவர்களில் 121 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டக்வர்த் லூயிஸ் முறைப்படி அவுஸ்ரேலிய அணி போட்டியில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Related posts: