வரலாற்றை மாற்றியெழுதுமா இலங்கை அணி?

Monday, July 17th, 2017

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதே விளையாட்டு மைதானத்தில் சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி விளையாடி வருகின்றது. இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, அனைத்து இலக்ககளையும் இழந்து 377 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

இது இலங்கை அணி முதல் இனிங்ஸில் பெற்றுக்கொண்ட ஒட்டங்களை விட 386 ஒட்டங்கள் அதிகமாகும். அதற்கமைய, இதனால் இலங்கை அணிக்கு387 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டள்ளது. இலங்கை அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்து இந்த வெற்றி இலக்கை அடைந்தால், 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் 350 ஓட்டங்களை விட அதிக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் வெற்றிப்பெற்ற வாய்ப்பு இலங்கைக்கு ஏற்படும்.

இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி அதிக ஓட்ட எண்ணிக்கையை, வெற்றி இலக்காகக் கொண்ட போட்டியை 2006ஆம் ஆண்டு சந்தித்திருந்தது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இவ்வாறு இலங்கை வெற்றி இலக்காக 352 ஓட்டங்களை துரத்தியிருந்தது.அதேபோல, இலங்கை அணி 300க்கும் அதிக ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு வெற்றிப்பெற்ற மற்றுமொரு சந்தர்ப்பம் 1998ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது.

சிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியிலேயே இது பதிவானது.இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமின்றி 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணியால் இவ்வாறான வெற்றி இலக்கை துரத்தியதாக தகவல்கள் எதுவும் பதியப்படவில்லை.

Related posts: