T20 உலகக் கிண்ணம் – பங்களாதேஸ் அணியை வென்றது ஸ்காட்லாந்து!

Monday, October 18th, 2021

ஓமான் அல் அமீரட்டில் நடந்த நேற்றைய டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று பி பிரிவு போட்டியில் பங்களாதேஸ் அணிக்கு அதிர்ச்சியளித்து ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது

இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் அமேசான் நிறுவனத்தில் பார்சல் விநியோக சாரதியாக பணியாற்றியவர். .இவரே நேற்று ஆட்ட நாயகனுமாவார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. ஆனாலும் கிறிஸ் கிரேவ்ஸ் 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்ததோடு மார்க் வாட் (22) என்ற வீரருடன் சேர்ந்து 51 ரன்களை 7 ஆவது விக்கெட்டுக்காகக் கூட்டணி அமைத்தார். இதனையடுத்து 140 ரன்களை ஸ்காட்லாந்து எட்டியது.

பிறகு வங்கதேசம் துடுப்பெடுத்தாடிய போது இரண்டுவிக்கெட்களை 18 ஓட்டங்களிற்கு இழந்திருந்தபோது ஷகிப் அல் ஹசன் (20) முஷ்பிகுர் ரகீம் (38) ஸ்கோரை 65 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது கிறிஸ் கிரேவ்ஸ் தன் லெக் பிரேக் பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் சாய்க்க வங்கதேசம்134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று . தோல்வியை தழுவியது.

கிறிஸ் கிரீவ்ஸினால் பற்றி ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கொயட்சர் கூறும்போது சிறிது நாட்கள் முன்வரை அமேசான் நிறுவன பார்சல் விநியோக சாரதி – உலகக்கோப்பைக்காக தயாரிப்பில் ஈடுபட்ட போது 2 மாதங்களுக்கு முன்னால் கிறிஸ் கிரீவ்ஸ் முழு ஆர்வத்துடன் கிரிக்கெட்டில் செயல்பட்டார்.

கிறிஸ் கிரீவ்ஸ் குறித்து பெருமையடைகிறேன். அவர் உண்மையில் நிறைய தியாகம் செய்துள்ளார். அமேசான் டெலிவரி டிரைவரிலிருந்து இன்று ஆட்ட நாயகன் என்றால் சும்மா அல்ல. இதை நான் கூறுவதை அவர் பாராட்டுவார் என்று நான் உறுதியாக நம்பவில்லை. கிரீவ்ஸ் ஒப்பந்த வீரர் அல்ல. மிகவும் கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்தார்.

ஒரு மாதத்திற்கு முன்னால் கூட அவர் போட்டிகள் எதிலும் ஆடவில்லை. அசோசியேட் அணிகளில் தரமான வீரர்கள் இருப்பதை இதுவே அறிவுறுத்துகிறது. அவர்களுக்கு தளம் தேவை வாய்ப்பு கிடைத்தால் நிரூபிப்பார்கள்.” என்றார்.

000

Related posts: