விராட் கோஹ்லி என்ன கடவுளா?

Saturday, June 24th, 2017

கோஹ்லி என்ன கடவுளா என்று இந்திய அணியின் பயிற்சியாளரான கும்பளேவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்திய அணியின் தலைவரான கோஹ்லிக்கும், பயிற்சியாளரான கும்பளேவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதனால் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு பின் கும்பளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிவிடுவார் என்று கூறப்பட்டது.

அதன் படி கும்பளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் கோஹ்லிக்கு தன்னுடைய பயிற்சி ஸ்டைல் பிடிக்கவில்லை, அதனால் அவரது ஸ்டைலுக்கு தான் விட்டுவிட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கும்ப்ளேவின் ரசிகர்கள் சிலர் கோஹ்லி என்ன கடவுளா, அவர் கும்பளேவின் முன் ஒரு சிறிய குழந்தை என்று வசைபாடி வருகின்றனர். மேலும் சிலர் கும்பளேவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்திய அணி அடுத்து மோதும் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளர் பதவியில் கும்பளே தொடர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டிருந்தது.

ஆனால் பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பமில்லை என கும்பளே தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: