எதிர்வரும் 9 ஆம் திகதி வடக்கின் போர் ஆரம்பம்!

Sunday, March 5th, 2017

 

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோண்ஸ் கல்லூரி அகிய அணிகளுக்கிடையிலான கிறிக்கெற் போட்டி எதிர்வரும் 9ஆம், 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

111ஆவது வடக்கின் பெரும் சமரில் கிண்ணத்தை தம் கல்லூரிக்கு கொண்டு செல்லும் ஒரே முனைப்பில் இருக்கின்றது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி.சென் ஜோன்ஸ் கல்லூரி அணி, இம்முறை இடம்பெறவுள்ள மோதலுக்கு அணியில் 5 வருட காலம் விளையாடிய அனுபவம் கொண்ட வீரரான ஜெனி பிளமினின் தலைமையில் களமிறங்கவுள்ளது.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத் தொடரில் பிரிவு2இல் விளையாடி வரும் சென் ஜோஸ் கல்லூரியினர்,  இந்த பருவகால ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறியிருந்தாலும்,  பின்னர்சிறப்பான  பெறுதிகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

கல்லூரி அணியின் பதிவுகளை ஆராய்கையில்,  இதுவரை 18 போட்டிகளில்  விளையாடியுள்ள  இவ்வணி 3  போட்டிகளில் வெற்றியையும்,  5 போட்டிகளில்  இன்னிங்ஸ் வெற்றியையும், 8 போட்டிகளை சமநிலையிலும் நிறைவு செய்துள்ள அதேவேளை, 2 போட்டிகளில்  இன்னிங்ஸ்  தோல்வியையும் பெற்றுள்ளது. குறிப்பாக சமநிலையில்   நிறைவடைந்த போட்டிகளான கொழும்பு   றோயல் கல்லூரி,  கல்கிசை புனிததோமியார் கல்லூரி,  கண்டிதிரித்துவக் கல்லூரி,  அனுராதபுரம்  மத்திய கல்லூரி  ஆகிய பிரபல அணிகளுக்கெதிரான போட்டிகளில் சென் ஜோன்ஸ் கல்லூரி  அணிமுதல்  இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக் குழாமை நோக்குகையில்மிகுந்த  அனுபவம் பெற்ற அணியாகவே  விளங்குகின்றது. கடந்தவருடம் வடக்கின் பெரும் சமரில் களங்கண்ட அணியிலிருந்துவெறுமனே மூன்று வீரர்கள் மாத்திரமே இவ்வருடம்வெளியேறியிருக்கின்றனர். இலங்கை கனிஷ்ட அணியின் முதல் 30  பேர் கொண்ட குழாமில் உள்வாங்கப்பட்டிருந்த ஜெனி பிளமின்,  கபில்ராஜ் ஆகிய வீரர்களும், வடக்கின் பெரும் போரில் தனது பந்து வீச்சால் சாதித்து வரும் சுழற்பந்து வீச்சாளர் யதுசனும் அணியின் முக்கிய புள்ளிகளாக உள்ளனர்.

துடுப்பாட்டத்தை நோக்குகையில் அணி மிக நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ளது. அதிலும், ஜனி பிளமின், யதுசன், கபில்ராஜ், துலக்சன், தேவபிரசாத் ஆகியோர் பருவகாலத்தில் சோபித்துக் கொண்டிருக்கின்ற முக்கிய வீரர்களாவர்.

பந்து வீச்சு வரிசையில் வேகப்பந்து வீச்சாளர்களான நிரோசன், கபில்ராஜ் ஆகியோருடன் இணைந்து சுழற்பந்து வீச்சாளர்களான யதுசன், கிசாந்துஜன் ஆகியோர் எதிரணிக்குச் சவாலாக அமைவார்கள் என்பதில் ஐயமில்லை.

அதிகமான வீரர்கள் துடுப்பாட்டம், பந்து வீச்சு என இரண்டிலும் சாதிக்கக்கூடிய சகலதுறை வீரர்களாக இருப்பது சென் ஜோன்ஸ் அணியின் நம்பிக்கையை மேலும் வலுவடையச் செய்கின்றது.

Related posts: