ஹிற்லர் பிறந்த இல்லம் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு நிலையமாக மாறியது!

Monday, December 19th, 2016

ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பிறந்த ஒஸ்திரியா இல்லம் தற்போது ஊனமுற்றோர் பராமரிப்பு நிலையமாக மாறியுள்ளது. குறித்த வீட்டில் ஹிட்லர் தனது மூன்று வயதுவரை வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீட்டை என்ன செய்வது என்பது தொடர்பில் அண்மைக்காலமாக வாதப் பிரதி வாதங்கள் எழத் தொடங்கியிருந்தன

மேலும் அவ்வீட்டை அரசுடமையாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒஸ்திரிய அரசானது பேராடி வருகின்றது.இந்நிலையில் ஒஸ்திரிய பாராளுமன்றில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தில் குறித்த கட்டிடத்தை பலவந்தமாக ஆக்கிரமிப்பதற்கான அனுமதியை அந்நாட்டு அரசியல் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.

அதனால் எற்படும் பிரச்சினைகளை தடுப்பதற்காக சுமூகமான முடிவையும் ஒஸ்திரிய அரசினர் கையாள உள்ளனர்.இந்நிலையில் நாஸிஸ ஆட்சியில் பாதிக்கப்பட்ட வர்களுக்கான பராமரிப்பு நிலையமாக ஹிட்லரின் வீடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊனமுற்றோர் பராமரிப்பு நிலையமாக நடத்துவதற்கும் உள்ளுர் அரசியல் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6151955793

Related posts: