ரொஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் நேருக்கு நேர் மோதல்!
 Tuesday, January 1st, 2019
        
                    Tuesday, January 1st, 2019
            பிரபல டென்னிஸ் வீரர்களான ரொஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளனர்.
ஹொப்பென் கிண்ணத்துக்கான கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடைபெறவுள்ளது.
இதில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஃப்ரான்செஸ் ஷியாஃபோ ஆகியோர் ஒரே அணியில் உள்ள நிலையில், ரொஜர் பெடரர், பெலின்டா பென்சிக் உடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
வில்லியம்ஸ் மற்றும் பெடரருக்கு இடையில் நேரடி மோதல் இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
37 வயதான அவர்கள் இருவரும் மொத்தமாக 43 க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே பிரிவில் இடம்பெற செய்யாதீர்கள் ஐசிசிக்கு பிசிசிஐ புதிய ...
நல்லூர்ப்பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி - நாயன்மார்க்கட்டு பாரதி அணி சம்பியன்!
பங்களாதேஷ் அணியை வெற்றிகொண்டது இலங்கை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        