சர்வதேச போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தானை ஒரே பிரிவில் இடம்பெற செய்யாதீர்கள் ஐசிசிக்கு பிசிசிஐ புதிய கோரிக்கை!

Friday, September 30th, 2016

சர்வதேச போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரே பிரிவில் இடம்பெற செய்யாதீர்கள் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து உள்ளது.

பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து இருநாடுகள் இடையே பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கோரிக்கையை முன்வைத்து உள்ளது, அதில் சர்வதேச போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரே பிரிவில் இடம்பெற செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் பேசுகையில், “பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு புதிய வியூகத்தை கையில் எடுத்து உள்ளது மற்றும் பொதுமக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு நாங்கள், சர்வதேச போட்டிகளில் இனி இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரே பிரிவில் இடம்பெற செய்யாதீர்கள் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளோம்,” என்று கூறிஉள்ளார். இருநாடுகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அப்போது மோதிக் கொள்ள வேண்டும். இது ஒரு நிகாரிக்கமுடியாத சூழ்நிலை என்று குறிப்பிட்டு உள்ளார்.

இன்னும் 7 மாதங்கள் கழித்து இங்கிலாந்தில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

பல்வேறு நாடுகள் கலந்துக் கொள்ளும் சர்வதேச போட்டிகளை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் எப்போதும் பரம்பரை எதிரியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் இடம்பெற செய்து வருகிறது. தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டியை ஏற்கனவே நிறுத்திவிட்டது. இந்நிலையில் உரி பயங்கரவாத தாக்குதல் நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது.

img1130603002_1_1

Related posts: