கொக்குவில் இந்துவை வென்றது யாழ். மத்தி!

Tuesday, May 1st, 2018

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது.

நான்கு கால் பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. முதலாவது கால் பாதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 18:6 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. இரண்டாவது கால்பாதியும் 22:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் மத்தியின் வசமானது. முதல் பாதியின் முடிவில் 40:21 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.

மூன்றாவது கால் பாதியை 22:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி. நான்காவது பாதியில் சிறிது ஆதிக்கம் செலுத்திய கொக்குவில் இந்து அதை 30:16 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது. முடிவில் 78:66 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.

Related posts: