டோனி ஓய்வு பெறுவதில் புதிய திருப்பம்..!

Saturday, July 20th, 2019

டோனியின் எதிர்காலத் திட்டம் குறித்து நாளுக்கு நாள் ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவரது நீண்டகால நண்பரும் வணிகப் பங்குதாரருமான அருண் பாண்டே விளக்கமளித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன.

டோனியின் நீண்ட கால நண்பரான பாண்டே, அவரது விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸுக்கு தலைமை தாங்குவதோடு தனது வணிக நலன்களை கவனித்து வருகிறார்.

பி.டி.ஐ.க்கு பேட்டியளித்த அருண் பாண்டே, டோனி ஓய்வு பெறுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை. அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்கள் வருவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுசெய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற கேப்டன் டோனியுடன் பிசிசிஐ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோனி தனது தலைமையில், உலகக் கோப்பை, உலக கோப்பை டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து முக்கிய ஐ.சி.சி போட்டிகளிலும் இந்தியாவுக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர் என்பது நினைவுக் கூரதக்கது

Related posts: