ரொஜர் பெடரர் ஒலிம்பிக்கில் பங்கேற்க மாட்டார்!
Wednesday, July 27th, 2016
நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்வரும் மாதம் ரியோ டி ஜெனய்ரோவில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெடரர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதான பெடரர் 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமாயின் போதியளவு ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாமல் போனமை வருத்தமளிப்பதாக பெடரர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தரவரிசையில் முன்னேற்றிய ரங்கன ஹேரத்!
இந்திய அணி வாழ்த்திய பாகிஸ்தான் வீரர்: கடும் ஆத்திரத்தில் ரசிகர்கள்!
பி.எஸ்.ஜி கழகத்தில் இருந்து விடைபெறும் லயனல் மெஸ்ஸி!
|
|
|


