தரவரிசையில் முன்னேற்றிய ரங்கன ஹேரத்!

Thursday, July 20th, 2017

சுற்றுலா சிம்பாப்வே அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சு திறமையின் படி அவர் சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சு தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்த போட்டியில் ரங்கன ஹேரத் 11 விக்கட்டுக்களை வீழ்த்தி தொடராட்ட நாயகன் விருதை பெற்றிருந்தார்.இந்த தரப்படுத்தலில் முதலிடத்தை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பிடித்துள்ள நிலையில் மூன்றாவது இடத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார்.மேலும், டெஸ்ட் பந்துவீச்சு தரப்படுத்தலில் முதல் மூன்று இடத்தையும் சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளமை சிறப்பம்சமாகும்.இதேவேளை , இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லஹிரு குமார் இரண்டு இடங்கள் முன்னேறி 61 இடத்தை பிடித்துள்ளார்.

இதேவளை, டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பந்துவீச்சுத் தரப்படுத்தலில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்சிம்பாப்வே ஆணியுடனான டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு 11 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், இந்த முன்னேற்றத்தை அவர் கண்டுள்ளார்

இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்முதலாம் இடத்தில் ரவீந்திர ஜடேஜா உள்ளார்.அதேநேரம் துடுப்பாட்ட தரவரிசையில் டெஸ்ட் போட்டிகளில் ஸ்டிவ் சுமித் முதலாம் இடத்தில் உள்ளார்.ஜோய் ரூட் மற்றும் கேன் வில்லியம்ஸ் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளனர்

அதேநேரம் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் முதல் 18 இடங்களுள் இலங்கை அணியைச் சேர்ந்த யாரும் இல்லை.19ம் இடத்தில் அஞ்சலோ மெத்தீவ்ஸ் உள்ளார்.

 

Related posts: