ரெய்னாவின் வருகையுடன் வெற்றி பாதைக்கு திரும்பியது குஜராத்!

ஐபிஎல் தொடரில், நேற்று முதன் முறையாக கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தினால் வெளிநாட்டிற்கு சென்ற குஜராத் அணித்தலைவர் ரெய்னா, தற்போது அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது குஜராத் அணிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக,நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ஒட்டங்களை குவித்தது.
125 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது.
குஜராத் அணித்தலைவர் ரெய்னா 36 பந்துகளில்53 ஒட்டங்கள் குவித்தது அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
Related posts:
|
|