இந்திய வரலாற்றில் முதல் முறையாக கோஹ்லி சாதனை!

Sunday, July 24th, 2016

வெளிநாட்டு மண்ணில் 200 ரன்கள் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்றுவரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவிலுள்ள சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் விராட் கோஹ்லி சதம் விளாசிய நிலையில் 2வது நாள் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி இரட்டைச்சதம் அடித்து வரலாற்று பதிவை பெற்றுக்கொண்டுள்ளார்.

Related posts: