ஒலிம்பிக்கில் பளு தூக்கிய வீரரின் கை முறிந்தது!

Thursday, August 11th, 2016

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அர்மீனிய பளுதூக்கு வீரருக்கு போட்டியின் போது இடது கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற அர்மீனிய வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யன் 195 கிலோ எடையை தூக்க முயன்ற போது அவரின் இடது முழங்கை முறிந்ததால், வலியில் துடிதுடித்தார். விளையாட்டு வீரர்களுக்கு வலி ஏற்படுவது வழக்கம், அதிலும் பளு தூக்கும் வீரர்கள் தனக்கு ஏற்படும் வலியோடு எடை தூக்கி சாகசம் நிகழ்த்துகின்றனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் சமீர் அயிட், ஜிம்னாஸ்டிக் போட்டிக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற போது அவரது இடது கால் முறிந்தது.

பெண்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின் விபத்தில் சிக்கி காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

37181E9300000578-3733995-image-a-31_1470876333117

3717DAA900000578-3733995-With_his_medal_hopes_crushed_by_a_cruel_twist_of_fate_Karapetyan-m-1_1470883369423

Related posts: