25 ஓவர்களுக்கு ஒரு ஓட்டம் எடுக்காது ஆஸ்திரேலிய அணி சாதனை!

Sunday, July 31st, 2016

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் மிகச் சிறந்த அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியினர், நேற்று மற்றொரு ‘சாதனையை’ நிகழ்த்தியிருக்கின்றனர் .

தாங்கள் நினைவில் வைத்துப் பெருமைப்படும் சாதனையல்ல அது – 154 பந்துகளை ஒற்றை ரன் கூட எடுக்காமல் கையாண்ட ‘சாதனையை’ அவர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர்.டெஸ்ட் போட்டியென்றாலே மெல்லத்தான் நகரும் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இது ஆமை வேகத்தைத் தாண்டி நத்தை வேகத்தில் ஆடிய ஆட்டம்தான்.

இந்த ‘சாதனையை’ ஆஸ்திரேலிய அணியினர், இலங்கையில் தொடங்கிய டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க செய்தனர் . ஆனாலும் தோல்வியை அவர்கள் தவிர்க்க முடியவில்லை.பல்லேகலவில் நடந்த இந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 106 ரன் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது.

இலங்கை ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வெல்வது இது இரண்டாவது முறை மட்டுமே.இலங்கையில் நடக்கும் இந்த மூன்று டெஸ்ட் தொடரின் அடுத்த டெஸ்ட் காலியில் வியாழனன்று தொடங்குகிறது.

Related posts: