கோலியை நாடும் அவுஸ்திரேலிய தலைவர்!

Tuesday, November 26th, 2019

அவுஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கோடைக்காலம் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முக்கியமான அணிகளை வரவழைத்து டெஸ்ட் உள்பட முக்கிய போட்டிகளில் விளையாடும்.

முதல் போட்டியை பிரிஸ்பேனில் உள்ள கப்பா (Gabba) மைதானத்தில் நடத்தும். இங்குள்ள ஆடுகளம் தொடக்கத்தில் ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதன்பின் ஆடுகளத்தில் சற்று அதிகமான பவுன்ஸ் இருக்கும்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இங்குள்ள சூழ்நிலையை நன்றாக அறிந்திருப்பதால் சுலபமாக ஓட்டங்கள் குவித்து விடுவார்கள். அதேபோல் சுழற்பந்து வீச்சில் பவுன்ஸ் இருப்பதால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு மூலம் திணறடித்து விடுவார்கள்.

1988 ஆம் ஆண்டுக்குப் பின் அவுஸ்திரேலிய கப்பாவில் தோல்வியடைந்தது கிடையாது. தொடரின் தொடக்கத்திலேயே எதிரணியை மனதளவில் தோற்கடித்து விடுவார்கள். இந்தியா பிரிஸ்பேனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியில் டிரா கண்டுள்ளது.

ஆனால் கடந்த முறை இந்தியா அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. ஆனால் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறவில்லை. மாறாக அடிலெய்டில் நடைபெற்றது. இந்தியா அதில் வெற்றி பெற்றது.

அடுத்த கோடைக் காலத்தில் இந்திய அணி அவுஸ்திரேலியா வரும்போது, பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி தலைவர் விராட் கோலியிடம் அனுமதி தலைவர் என்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பின் டிம் பெய்ன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது முதல் போட்டியை கப்பாவில் நடத்த விரும்புவீர்களா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிம் பெய் பதில் அளிக்கையில் ‘‘நிச்சயமாக. உறுதியாக நாங்கள் முயற்சி செய்வோம். இதை நாங்கள் விராட் கோலியால் செயல்படுத்த முடியும். குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் அவரிடம் இருந்து பதிலை பெறுவோம். அது உறுதி.

கடந்த கோடைக்கால தொடரை தவிர்த்து நீண்ட காலமாக நாங்கள் பிரிஸ்பேனில் இருந்துதான் தொடரை தொடங்கியுள்ளோம். ஆகவே, நாங்கள் அவரிடம் கேட்போம். விராட் கோலி நல்ல மனநிலையில் (good mood) இருந்தால், பிங்க்-பால் டெஸ்டிற்குக் கூட அனுமதியை பெறலாம்’’ என்றார்.

Related posts: