யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கிண்ணம் வென்றது!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 18 வயதுப் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது. ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முதலாவது கோலைப் பதிவு செய்தார் றொனால்ட்.
இரண்டாவது பாதியின் 15 ஆவது நிமிடத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் இரண்டாவது கோல் றொனால்ட்டால் பதிவானது. முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.
Related posts:
மாற்றுத் திறனாளர்களுக்கு தடை: ரய்ஷியா கடும் கண்டனம்!
சுதந்திரக் கிண்ணத் தொடர்: இலங்கை அணி தோல்வி!
செர்பியாவை துவம்சம் செய்த சுவிட்சர்லாந்து!
|
|