செர்பியாவை துவம்சம் செய்த சுவிட்சர்லாந்து!

Saturday, June 23rd, 2018

ஃபிபா உலக கிண்ணம் பிரிவு சுற்று இரண்டாவது ஆட்டத்தில்  பிரிவில் சுவிட்சர்லாந்து 2-1 என செர்பியாவை வென்று ஷாக் கொடுத்தது.

இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வென்றது செர்பியா. இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் முன்னாள் சாம்பியனான பிரேசில் விளையாடியது.

இந்த ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.

சுவிட்சர்லாந்தின் ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் உலகின் காஸ்ட்லியான வீரரான பிரேசிலின் நெய்மர் கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார்.

இந்த நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது. நெய்மர் முதல் கோலை அடித்தார். அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியாவுடன் சுவிட்சர்லாந்து விளையாடியது.

துவக்கத்தில் இருந்தே சுவிட்சர்லாந்தின் ஆட்டமாக இந்த ஆட்டம் அமைந்தது. 62 சதவீத நேரம் பந்து அந்த அணியிடம் இருந்தது.

20 முறை கோலடிக்கும் வாய்ப்பு அதற்கு கிடைத்தது. அதில் 5 முறை கோல் பகுதிக்குள் பந்தை அது செலுத்தியது.

ஆட்டத்தின் 5வது நிமிடம் மிட்ரோவிக் கோலடிக்க செர்பியா 1-0 என முன்னிலை பெற்றது.

முதல் பாதியிலும் செர்பியா முன்னிலையுடன் முடித்தது. அறிமுக அணியான சுவிட்சர்லாந்து காலி என்று நினைத்த நிலையில் 52வது நிமிடத்தில் ஷாகா கோலடித்து சமநிலையை உருவாக்கினார்.

ஆட்டம் டிராவில் முடியும் என்று நினைத்த நேரத்தில் கடைசி நிமிடத்தில் ஷாகிரி ஒரு கோல் அடிக்க 2-1 என சுவிட்சர்லாந்து அபாரமாக வென்றது.

இதன் மூலம் சுவிட்சர்லாந்து 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்திடம் ஷாக் ட்ரீட்மென்ட் வாங்கிய நெய்மரின் பிரேசிலும் 4 புள்ளிகளுடன் உள்ளது. செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது.

இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த கோஸ்டாரிகா வெளியறியது. அடுத்து 27ம் திகதி நடைபெறும் ஆட்டத்தில் செர்பியா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா மோதுகின்றன.

அதன் முடிவுகளின்படியே, நாக் அவுட் சுற்றுக்கு யார் முன்னேறுவர் என்பது உறுதியாகும்.

இ பிரிவில் இதுவரை…

  • செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது
  • பிரேசில் 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது
  • பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது
  • சுவிட்சர்லாந்து 2-1 என செர்பியாவை வென்றது

Related posts: