மாற்றுத் திறனாளர்களுக்கு தடை:  ரய்ஷியா கடும் கண்டனம்!

Tuesday, August 9th, 2016

அரசின் ஆதரவோடு நடைபெற்றுள்ள ஊக்க மருந்து ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக, அடுத்த மாதம் பிரேசிலில் நடைபெற இருக்கும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ரஷியாவின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தடை செய்திருக்கும் சர்வதேச மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் கமிட்டியின் தீர்மானத்தை ரஷியா கோபத்துடன் கண்டித்திருக்கிறது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக ரஷியா மேல் முறையீடு செய்திருக்கிறது. “இந்த தடை காட்டுமிராண்டித்தனமானது” என ரஷிய வெளியுறவு அமைச்சகமும் “இந்த தீர்மானம் ரஷியாவின் எதிரிகளால் எடுக்கப்பட்டுள்ளது” என்று செய்தித்தாள் ஒன்றும் தெரிவித்திருக்கிறன.

ஒழுக்க நெறிகளுக்கு மேலாக பதக்கங்களை முதன்மைப்படுத்தி இருக்கும் ரஷியாவின் மனப்பான்மையால் வெறுப்படைவதாக சர்வதேச மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பிலிப்பு கிராவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும், பேரழிவுக்கு ரஷிய அரசு இட்டு சென்றிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts: