மொஹமட் ஹஃபீஸ் பந்து வீச ஐ.சி.சி அனுமதி!

பாகிஸ்தானின் சகலதுறை வீரர் மொஹமட் ஹஃபீஸ் மீண்டும் பந்துவீசுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு அபுதாபியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது, அவரது பந்துவீச்சு முறைமையில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையின் பின்னர் சர்வதேச கிரிக்கட் பேரவை அவருக்கு பந்துவீச்சுத் தடையை விதித்திருந்தது.
எனினும் பின்னர் அவரது பந்துவீச்சு பானியில் மாற்றங்களை ஏற்படுத்தி, மீண்டும் சோதனைக்கு உட்பட்டதன் அடிப்படையில் அவர் மீதான தடையை சர்வதேச கிரிக்கட் பேரவை நீக்கியுள்ளது.
இதற்கு முன்னர் 2 இரண்டு தடவைகள் அவருக்கு தடை விதிக்கப்பட்டு மீண்டும் தடை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐ.பி.எல். தொடரில் இன்றைய தினம் இரவு 8 மணிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற உள்ளது.
Related posts:
இலங்கை கிரிக்கெட் சபைக்கு 128 மில்லியன் டொலர்!
தரங்க அதிரடி: தம்புள்ளை அணியை வீழ்த்தி காலி !
உலகக் கிண்ணத் தொடர் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி!
|
|